காஞ்சிபுரத்தில் மணல் திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் சுரேஷ் மர்மமான முறையில் இறந்துள்ளார்.?

0
0

காஞ்சிபுரம் அடுத்த காந்தி நகரை சேர்ந்த சுரேஷ் லாரி ஓட்டுனராக இருந்துள்ளார். இவர், பாலுசெட்டிச்சத்திரம் பகுதியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக புகார் வந்தது.

இதனால், பாலுசெட்டிச்சத்திரம் காவல் நிலையத்தின் மணல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணைக்காக சுரேஷை அழைத்து சென்றுள்ளனர். ஆனால், பாலுசெட்டிச்சத்திரம் அருகே தாமல் ஏரியில் சுரேஷ் மர்மமான முறையில் காலை பிணமாக கிடந்துள்ளார். இதனால், சுரேஷின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்து, செய்வது அறியாது திகைத்துள்ளனர். பின்னர், மணல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைந்த்து சென்று கொலை செய்து, ஏரியில் வீசியுள்ளனர் என குற்றஞ்சாட்டினர்.

பின்னர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை நுழைவாயில் முன்பு போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து காஞ்சிபுரம் டி.எஸ்.பி.முகிலன் தலைமையில் 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலைவி வருகிறது

Media 7 செய்திகளுக்காக
காஞ்சிபுரத்திலிருந்து
ம.சசி

825 total views, 3 views today