கள்ளசாராய வியாபாரிகளை தட்டி தூக்கிய குறிஞ்சிப்பாடி காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பொறுப்பேற்ற பிரசன்னா அன்று முதல் அதிரடி காட்டி பரவலாக கள்ளசாரய வியாரிகளை தட்டி தூக்கி கள்ளசாராய வியாபாரிகளை ஓட விட்டார்.
குறிஞ்சிப்பாடி பகுதியல் கள்ளசாராய விற்பனையை செய்யாமல் அவர்களை ஓடவிட்டு வந்த நிலையில், குடும்ப பெண்கள் போர்வையில் குறிஞ்சிப்பாடி புவனகிரி சாலையில் இட்லி கடை நடத்தி வரும் காமாட்சி என்ற பெண்ணும், அவருக்கு துணையாக மதிவதனி யும் கூட்டாக சேர்ந்து,
புதுச்சேரியில் இருந்து கள்ளதனமாக சாரயம் மற்றும் புதுவை மாநில பிராந்தியும் கடத்தி குறிஞ்சிப்பாடியில் விற்பனை செய்து வந்த இவர்களை, பொறி வைத்து அதிரடியாக இருவரையும் கையும் களவுமாக கைது செய்தார்.குறிஞ்சிப்பாடி காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா குறிஞ்சிப்பாடி காவல் நிலைய காவலர்களும் உடன் இருந்தனர்.
இவரின் அதிரடியால், திருட்டு, வழிபறி, போன்ற குற்ற சம்பவங்கள், தற்போது குறைந்து உள்ளதாக மக்கள் பாராட்டுகின்றனர்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் அவர்கள் இவரின் சிறப்பான காவல் பணிக்கு குடியரசு தனத்தில் பாராட்டு மடலும் வழங்கியனார் என்பது கூடுதல் சிறப்பு….
மீடியா 7 செய்திக்காக அகிலன்

654 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close