கள்ளக்குறிச்சியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏவும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளருமான அ.பிரபு தலைமை வகித்து, 30 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கினார்.
கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் கோமுகி.மணியன், மாவட்ட அவைத் தலைவர் கே.பி.பாண்டியன், பேரவைச் செயலாளர் சி.பால்ராஜ், மாணவரணிச் செயலாளர் க.சீனுவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரும், தொழில்நுட்ப அலுவலருமான கண்ணன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணித் தலைவி தனலட்சுமி, ஒன்றியச் செயலாளர்கள் மதுசூதனன், தங்கதுரை, ராஜதுரை, நகரச் செயலாளர்கள் ஜெயப்பிரகாஷ், நம்பி, முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

611 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close