கல்லூரி மாணவன் கொலை வழக்கில் மூவர் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நேற்று திருபுவனத்தில் தனியார் கல்லூரி மாணவன் அவனியாபுரம் சேர்ந்த முந்தாசர் கொலை சம்பவத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்த நிலையில் காவல்துறை விசாரணையில்

திருப்புவனத்தை சேர்ந்த முஹம்மது ரபீக் மகன் இஜஸ் அஹமது, ஜியாவுதீன் மகன் ஜலாலுதீன், ராஜ் முஹம்மது மகன் முகம்மது சமீர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது

மேலும் காவல்துறை
விசாரணையில் காதல் சம்பவம் தொடர்பாக கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

மூவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

1,256 total views, 3 views today