கலப்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியர் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அடைக்கலம் கேட்டு தஞ்சம்.

தேனி மாவட்டம்.
தேனி PC பட்டியைச் சேர்ந்த என்பவருடைய 21 வயதுள்ள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவருக்கும்
பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் 25 வயதுள்ள ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு மேலாக காதல் ஏற்பட்டு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெரியகுளத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார்கள் என் அறையில் பிசி வெற்றி காவல்நிலையத்தில் பெண்ணின் வீட்டார் தனது மகளை காணவில்லை என்று புகார் கொடுத்ததின் பேரில்PC பட்டி காவல்துறை வழக்கு பதிவு செய்து தேடிவந்த நிலையில் இன்று தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட சுப்புலட்சுமி முகேஷ் தம்பதியினர் தங்களுக்கு பெண்ணின் வீட்டார் மூலமாக ஆபத்து ஏற்படும் என்று கூறி அடைக்கலம் கேட்டு தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்கள்

அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மூலமாக பிசி பட்டி காவல் நிலையத்திற்கு முறையாக தகவல் தஞ்சமடைந்த தம்பதியினரை விசாரணைக்காக PC பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றார்கள்
அங்கு பெண் வீட்டார் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியை பார்த்து ஆபாசமாக பேசி சத்தமிட்டு தாக்க வந்ததால் காவல் நிலையத்துக்கு முன்பாக சலசலப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த PC பட்டி காவல்துறை காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை பாதுகாப்பாக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்
இதுக்கிடையில் செய்தியாளர்களிடம்பேசிய சுப்புலட்சுமி. நான் 21 வயதுள்ள மேஜர் பெண் எனக்கு தேவையான வாழ்க்கை துணையை நானே தேடிக் கொண்டு எனக்கு பிடித்தமான நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன்
இவரை விட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று கூறினார்.

235 total views, 3 views today