கன மழைக்கு வாய்ப்பு

வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் பேசுகையில்;

குமரி கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசையில் நகர்ந்து மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் , விளாத்திக்குளத்தில் 11 செ.மீட்டர் மழையும், சிவகங்கையில் 10 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது. தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.

  • மேலும் வரும் 24 மணி நேரத்தில் தென்தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி, தேனி, திண்டுக்கல் , நெல்லை, குமரி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் இடியுடன்கூடிய கன மழை பெய்யக்கூடும். மாலத்ததீவு , லட்சத்தீவு ஒட்டிய பகுதிகளில் மீனவர்கள் 15 ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

63 total views, 3 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close