கந்துவட்டி கொடுமை கட்டிடஒப்பந்ததாரர் காவல்துறைக்கு கடிதம் எழுதிவைத்து தற்கொலை.!

குடியாத்தம் 15-2-2018. கந்துவட்டி கொடுமை கட்டிடஒப்பந்ததாரர் காவல்துறைக்கு கடிதம் எழுதிவைத்து தற்கொலை.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாண்டியன் நகரில் வசித்துவரும் ஸ்ரீதர் கட்டிட ஒப்பந்ததாரராக தொழில் செய்துவருகிறார்  சில காரணங்களினால் தொழிலில் தொய்வு ஏற்ப்பட்டதால் சிலரிடம் தொழில் காரணமாக கடன் பெற்ற நிலையில் கடனை திரும்ப கொடுக்க இயலாமல் அவதிபட்டு வந்ததாகவும். இந்த நிலையில் வாங்கிய கடன் கந்து வட்டி என்பதால்  திரும்ப கொடுக்க இயலாமல் சில தினங்களாக  மிகவும்  மன உலைச்சளுடன்  காணப்பட்டதாகவும்  அதன் தொடர்ச்சியாக இன்று காலை   தனியார்  பள்ளியில்  ஆசிரியையாக  பணிபுரியும்  அவரின் மனைவி பள்ளிக்கு சென்ற நிலையில் அவர் வீட்டின் மாடியில் சென்று ஓய்வு எடுப்பதாக தனது  மகளிடம்  கூறி சென்ற அவர் நீண்ட நேரம் கீழே வராத நிலையில்  அவரின் மகள்  மாடிக்கு சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கியவாரு இருந்ததை கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டதால்  அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து  பார்த்து காவல்துறைக்கு கொடுத்த தகவல் அடிப்படையில் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் மேலும் வழக்கு பதிவு செய்து அவர் தன் கைபட எழுதிய கடித்தை வைத்து இவருக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர்களை  கண்டு பிடிக்கும் முயற்ச்சியில் காவல்துறையினர் விசாரனை செய்து வருகின்றனர்

வேலூர் செயதியாளர்
உமாசங்கர்

246 total views, 2 views today

Be the first to comment

Leave a Reply