தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் மீன்வள உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் கண்மாய்கள் உள்ளது இந்த கண்மாயில் பொதுப்பணித் துறை மூலமாக மீன் குஞ்சுகள் விடப்பட்டு பின்பு அந்தந்த பகுதியில் உள்ள பதிவு செய்யப்பட்ட மீனவர் சங்கங்களுக்கும் மீனவர்களுக்கும் மீன் பிடிக்க டெண்டர்விடுவது வழக்கம்.. இதில் கடந்த காலத்தில் பெரியகுளம் கண்மாய் .தாமரைக் குளம் கண்மாய். சில்வார்பட்டி கம்மாய் .குள்ளப்புரம் கம்மாய் உள்ளிட்ட கண்மாய்களில் முறைகேடாக மீனவர் அல்லாத தனிநபருக்கும். அரசு ஊழியர்களுக்கும் மறைமுகமாக டெண்டர் விடப்பட்டது இதனை எதிர்த்து மீனவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கும்போது மீன்வள உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களின் உடந்தை யோடு பொது ஏலம் விடாமலேயே குளத்தைஏலம் எடுத்ததாக கூறி கண்மாயில் ஆளும் கட்சியைச் சார்ந்த கோகிலாபுரம் லட்சுமணன் – T கள்ளிப்பட்டியைச் சார்ந்த மாங்காய் முத்து ஆகியோர்மீன் பிடித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று போலியான குத்தகை ரசீது போடப்பட்டு முறையாக அரசுக்கு வர வேண்டிய வருவாய் இனத்தை முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்கப்பட்டபோது மீன்வள உதவி இயக்குனர் அளித்த பதிலில் கடந்த இரண்டு ஆண்டுகள் முதல்இன்று வரை எந்தக் கண்மாயும் மீன் பிடிக்க யாருக்கும்ஏலம் விடப்படவில்லை என்று பதில் கிடைக்கப்பெற்றது என தெரிகிறது இதனைத்தொடர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேரடியாக மீன்வள உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று விபரம் கேட்டதற்கு சம்பந்தமில்லாமல் முன்னுக்கு பின் முரண்பாடாக பதில் அளித்ததாக தெரிகிறது இதனைத்தொடர்ந்து மீன்வள உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து குளங்களுக்கும் முறையாக பொது ஏலம் விடப்பட வேண்டும் அதேபோல் இந்த ஏல முறையில் அந்தந்த பகுதியில் உள்ள மீனவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கடந்த இரண்டுஆண்டு காலமாக பல கோடி முறைகேடு நடைபெற்று உள்ளது இதனை தடுப்பதற்கு முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்க்கு நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பிலோ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பிலோ விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பெரியகுளம் தாலுகா செயலாளர் சௌந்தரபாண்டியன் இந்திய மாணவர் சங்கத்தின் தாலுகா செயலாளர் பிரேம். மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் காளிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள் இதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த வைகை அணை காவல் நிலைய காவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் மீன்வளதுறை உதவி இயக்குனர் உரிய விசாரணை நடத்தி இரண்டு தினங்களுக்குள் பதில் தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளதால் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கலைந்து சென்றனா

182 total views, 3 views today