கடலூர் மாவட்டம் புனகிரி வட்டம், புவனகிரி பழைய
வெள்ளாற்று பாலம் அருகில். புவனகிரி மாநகரில் கண்காணிப்பு கேமரா துவக்க விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது.

இன்றைய சூழ்நிலையில் குற்றங்கள் அதிகரித்துள்ளன கொலை ,கொள்ளை, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில், மா நகரம், குற்ற செயலில் கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை தடுக்கும் வகையில் ,சென்னை மாநகர காவல் ஆணையர்,
A.K. விஸ்வநாதன் அவர்களால், குற்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி, சென்னை புறநகரில், பல மாவட்டங்களில் சிசிடிவி கேமரா
பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது இதையடுத்து புவனகிரியில் உள்ள
1 வர்த்தக சங்கம்
2 ஊழல் எதிர்ப்பு இயக்கம்
3 லயன்ஸ் கிளப்
4 ரோட்டரி கிளப்
5 நம்ம புவனகிரி
6 தேசிய மக்கள் நல மன்றம்.
ஆகிய சமூக நல இயக்கங்கள் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு
டாக்டர்.M. முகமது ரஃபி தலைமை தாங்கினார்

சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
P. சரவணன் அவர்களால்,
சிசிடிவி கேமரா
துவக்கி வைக்கப்பட்டது.

சிதம்பரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்,
பாண்டியன்,புவனகிரி காவல்துறை வட்ட ஆய்வாளர்
ஆறுமுகம்,புவனகிரி வருவாய் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி மற்றும் இயக்கத் தலைவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்

செய்தியாளர்
அகிலன் மணி

510 total views, 3 views today