கட்டுமான நிறுவனம் டீம் 3 அசோசியேட்ஸ் மையம் கோவையில் துவக்கம் !!

செயற்கை மணல் குறித்த விழிப்புணர்வு தற்போது பொதுமக்களிடையே அதிகரித்து உள்ளதாக கோவையை சேர்ந்த டீம் 3 கட்டுமான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..

கட்டுமானத்துறையில் பல்வேறு நவீன முறைகள் வளர்ந்து வரும் முறையில், பொறியியல்,கட்டிடக்கலை மற்றும் உள் அலங்காரம் என அனைத்து கட்டுமானத்துறை சார்ந்த டீம் 3 அசோசியேட்ஸ் மையம் கோவை காளப்பட்டி சாலையில் துவங்கப்பட்டது.

இதன் துவக்க விழாவில் கே.எம்.சி.எச்.மருத்துவமனை தலைவர் நல்லா பழனிசாமி கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்தார். மூத்த பொறியாளர் சம்பத்குமார் தலைமையில் துவங்கப்பட்ட இந்த மையத்தில் வளர்ந்து வரும் கட்டுமானத்துறையில் குறைந்த செலவில் நவீன விதமான கட்டிடக கலை மற றும் பொறியியல் தொடர்பான அனைத்து ஆலோசனைகள் வழங்கப்படும்.

இது குறித்து மையத்தின் இயக்குனர்கள் பிரவீன் குமார் மற்றும் பிரபாகர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தற்போது இந்தியாவில் கட்டுமானத்துறை வேகமாக வளர்ச்சி கண்டு வருவதாகவும்,மேலும் எங்களது மையத்தில் முறையாக அரசு அனுமதி பெற்று நவீன முறையிலான கட்டிடக்கலை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.தொடர்ந்து தற்போது கட்டுமான துறையில் பெரும் சவாலாக உள்ள ஆற்று மணல் குறித்த விவகாரத்தில் செயற்கை மணல் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தனர்…இந்நிகழ்ச்சியில் பொறியாளர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

429 total views, 3 views today