கடையநல்லூரில் ஐடிஐ மாணவன் வெட்டி கொலை காவல்துறையினர் விசாரணை

கடையநல்லூரில் ஐடிஐ மாணவன்
வெட்டி கொலை காவல்துறையினர் விசாரணை

நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள மேலக் கடையநல்லூர் சுடலைமாடன் கோவில் தெருவை சார்ந்த கந்தசாமி மகன் முருகன் (17) வீ.கே.புதூர் அரசு ஐடிஐ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை நண்பர்கள் செல்போன் அழைப்பின் பேரில் வீட்டை விட்டு சென்றவன் இரவு முழுவதும் வீடு திரும்பததாதால் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியபோது அருகில் உள்ள பெரிய குளத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.

தகவல் அறிந்த கடையநல்லூர் காவல்துறையினர் முருகனின் உடலை கைபற்றி கடையநல்லூர் அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து நண்பர்களுடன் மோதலா, அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்தில் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

80 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close