கடலூர் வெள்ளி கடற்கரையில் இளைஞர்கள் துப்புரவுப் பணி

கடலூர் மாவட்டத்தின் மிகவும் எழில்மிகு கடற்கரையான வெள்ளிக்கடற்கரை தற்பொழுது பொலிவிழந்து குப்பைகளாக காணப்பட்டது

இதற்கு முற்றுப்புள்ளியாக டாக்டர் அப்துல்கலாம் நினைவு இளைஞர் அறக்கட்டளை மற்றும் கடலூர் மாவட்ட நிகழ்ச்சிகள் குழு முகநூல் நண்பர்கள் முயற்சியில் இன்று காலை சுத்தம் செய்ய முடிவெடுத்தனர்

காலை ஆறு மணியளவில் தொடங்கிய சுத்தம் செய்யும் பணியில் ஏராளமான இளைஞர்கள் பெண்கள் கலந்து கொண்டனர் இறுதியில் சுமார் மூன்று டன்னுக்கு மேல் குப்பை சேகரிக்கப்பட்டது

இதுமட்டுமின்றி இன்னும் பல பொது இடங்களில் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த சமூக வலைத்தள ஆர்வலர்கள் தெரிவித்தனர்

ம.மனோகர்
மாவட்ட செய்தியாளர்

304 total views, 2 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close