கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் முகநூலில் நண்பருடன் இளம்பெண் பேசி பழகியதால் கொலை.

0
0

whatsapp-image-2016-10-10-at-12-32-14-pmkwhatsapp-image-2016-10-10-at-12-32-20-pm

கடலூர் மாவட்டம் பலாப்பழத்திற்கு பெயர் போன பண்ருட்டியில் இளம்பெண் பட்டபகலில் படுகொலை செய்யப்பட்டார் இதுகுறித்து பண்ருட்டி போலிஸ் விசாரணை நடத்தினர் கடலூர் பண்ருட்டியில் உள்ள ஆர் எஸ் மணி நகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் சுலைமான் இவர் பண்ருட்டியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார் இவரது மனைவி யாஸ்மின் (20) இவர் பதினோராம் வகுப்பு வரை படித்துள்ளார் இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகிறது சுலைமான் வேலைக்கு சென்றவுடன் யாஸ்மின் தனியாக வீட்டில் இருப்பார் பக்கத்து தெருவில் யாஸ்மினின் தாய் தந்தை வசித்து வருகிறார் இதனால் யாஸ்மினின் தாய் பர்வீன் யாஸ்மினின் வீட்டிற்கு மகளை பார்க்க அடிக்கடி சென்று வருவது வழக்கம் இந்நிலையில் கடந்த 8 ந் தேதி மாலை நேரத்தில் மகளை பார்க்க சென்றவுடன் யாஸ்மினின் வீட்டில் படுக்கை அறையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார் இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலிஸ்சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யாஸ்மினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்

முதற்கட்ட விசாரணையில் யாஸ்மின் வீட்டில் உள்பக்கமாக பூட்டி கொண்டு வீட்டிற்கு யாரேனும் தெரிந்தவர்கள் வந்தால் மட்டுமே கதவை திறப்பார் இதனை அறிந்த காவல்துறை உறவினர்களிடம் விசாரணை தொடக்கினா் அதே பகுதியில் உள்ள
மாமன் மகன் அனிபா (22) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரணை மே‌ற்கொ‌ள்ள தேடி வந்தனர் இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சையத் இப்ராகிம் என்பவரிடம் சரணடைந்தார் அனிபா பின்னர் காடாம்புலியூர் பண்ருட்டி காவல்துறை அனிபாவை விசாரணை மேற்கொண்டபோது யாஸ்மினை கொலை செய்ததை ஒப்புகொண்டார்

விசாரணையில் கொலை பற்றி கூறியதாவது நான் டிப்ளமோ படித்துள்ளேன் எனது அத்தை மகள்தான் யாஸ்மின் எனவே அவரை எனக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தனர் ஆனால் திடீரென யாஸ்மினை எனது பெரியப்பா மகன் சுலைமானுக்கு திருமணம் செய்து விட்டனர் அவர்கள் திருமணத்திற்கு பின்னர் சில காலம் வெளிநாட்டில் இருந்த சுலைமான் தற்பொழுதுதான் ஊருக்கு வந்திருந்தார்
இதற்கிடையே யாஸ்மின் முகநூலில் கணக்கு வைத்திருந்தது எனக்கு தெரிய வந்தது மேலும் யாஸ்மின் முகநூல் மூலம் பண்ருட்டியை சேர்ந்த ஒருவருடன் அவர் பேசி பழகிவருவதை அறிந்துகொண்டேன் இதனால் அவர்மீது சந்தேகம் ஏற்பட்டது எனது அண்ணன் மனைவி என்பதால் நான் நேரில் சென்று கண்டித்தும் முகநூல் பயன்படுத்தி வந்தார்
சம்பவத்தன்று நான் யாஸ்மினின் வீட்டிற்கு சென்றேன் வழக்கம்போல் கதவு மூடி இருந்தது அவரை சத்தமிட்டு அழைத்து எனக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டேன் கதவை திறந்து தண்ணீர் கொடுத்தார் அப்பொழுது முகநூலில் யாருடனும் நீ பேசகூடாது என்று கூறினேன் இதை கேட்ட யாஸ்மின் என்னை சந்தேகப்படுகிறாயா என்று கேட்டு எனது கன்னத்தில் பளார் என்று அறைந்தார் இதனால் ஆத்திரமடைந்த நான் அங்கிருந்த மிளகாய் பொடியை வீசினேன் பின்னர் கோபத்தில் அருகில் இருந்த உளியை எடுத்து அவரது தலையில் ஓங்கி குத்தினேன் ரத்தம் வெளியானது ஆத்திரம் தீரும் வரை எட்டு முறைக்குமேல் குத்தினேன் இதில் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்

பின்னர் திகைத்து போன நான் யாரிடமும் சிக்கிக் கொள்ளாமல் தப்பி செல்ல முயன்றேன் அதற்கு பணம் தேவை என்பதால் யாஸ்மின் அணிந்திருந்த நகைகள் செல்போன் போன்றவற்றை எடுத்து கொண்டு ஓடினேன் இதில் எனது சட்டையில் ரத்தக்கறை இருந்தது சட்டையை கழற்றி யாஸ்மினின் வீட்டிற்கு அருகே உள்ள வேலியில் எரிந்து விட்டு வீட்டுக்கு சென்று வேறு உடையணிந்து தலைமறைவானேன் இவ்வாறு கொலை செய்த அனிபா வாக்குமூலம் அளித்தார் இதனையடுத்து அனிபாவிடம் இருந்த நகை செல்போன் கொலை செய்த உளி ஆகியவற்றை போலிஸ் பறிமுதல் செய்தனர் பின்னர் அனிபாவை பண்ருட்டியில் உள்ள கோர்ட்டில் ஆஜர் படுத்தி நேற்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

செய்தி தொகுப்பு
ம.மனோகர் மீடியா7

851 total views, 3 views today