தேசிய மாணவர் படை சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

தேசிய மாணவர் படை 6 ஆவது படைப்பிரிவு அண்ணாமலைநகர் சார்பில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்களுக்கு க ப சுர குடிநீர் வழங்கப்பட்டது. விடைத்தாள் முகாம் அலுவலர் திரு. சுந்தரமூர்த்தி அவர்கள் கபசுர குடிநீரை ஆசிரியர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். முன்னதாக முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு.முருகன் அவர்களின் அறிவுறுத்துதலின் படி கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் , கடலூர் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த கல்வி அலுவலகங்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர்கள் பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய மணவர் படை அலுவலர் ஆ.ராஜா, திருப்பாபுலியூர் தூய வளனார் மேல்நிலைப்பள்ளி ஏ. ஆண்டனி பிராங்க்ளின் ஜோசப் ஆகியோர் கபசுர நீர் ஏற்பாடு செய்திருந்தனர்…..

கடலூர் மாவட்டம்

180 total views, 3 views today