கடலூர் சில்வர்பீச் செல்லும் பிரதான சாலையின் மிக முக்கியமான பாலம் இது
சில ஆண்டுகளுக்கு முன்தான் பழைய பாலம் வலுவிழந்ததையடுத்து இப்பாலம் புதியதாக கட்டபட்டது

தற்போது இப்பாலத்தின் நடுவே ஆங்காங்கே விரிசல்களும் பள்ளங்களும் விழ துவங்கியுள்ளது.

தேவனாம்பட்டினம் செல்லும் மக்களும் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநில சுற்றுலா பயணிகளும் அதிகமானோர் வந்து செல்லும் பிரதான சாலை இது இதன் தரம் எப்படி இருக்க வேண்டுமென்பதில் கண்டிப்பாக அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துதல் அவசியம்

கடலூரில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டபட்ட பல பாலங்கள் 50ஆண்டுகளுக்கு மேலாக பலன் அளித்துள்ளது நாம் நன்கு அறிவோம்
தற்போது கட்டபட்டபடும் பாலங்கள் அதே அளவு ஆற்றலும் வலுவும் கொண்டதாக தான் உள்ளதா

அன்றைய போக்குவரத்து மிக குறைவு…ஆனால் வளர்ந்து வரும் நாகரீக உலகில் அதி நவீனத்துடனும் மிகவும் தரம் மிக்க பாலங்களும் சாலைகளும் தேவைபடுகின்றன எனவே சம்மந்தபட்ட துறை இதில் அதீத கவனம் செலுத்துதல் மிக அவசியமாகிறது

சீல்வர்பீச்சின் பிரதான சாலையில் உள்ள இப்பாலத்தை உடனடியாக சம்மந்தபட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுநடத்தி உடனடியாக புணரமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

வேப்பூர் செய்தியாளர்
உசேன்

 503 total views