கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானை கூட்டம் படையெடுத்துள்ளதால், நெல் அறுவடையை தீவிரப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சானமாவு வனப்பகுதியை ஒட்டியுள்ள பல கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர், அறுவடை காலத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ஐம்பது , சானமாவு வனப்பகுதியில் முப்பது என காட்டு யானைகள் இருகுழுக்களாக முகாமிட்டுள்ளன.

இவை எந்த நேரத்திலும் விவசாய நிலங்களில் இறங்கி பயிர்களை சேதப்படுத்தலாம் என்பதால், அறுவடையை தீவிரமாக்க வனத்துறையினர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

 321 total views,  2 views today