நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்மபுரியைச் சேர்ந்த ஆதித்யா என்கிற மாணவர் இன்று தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
13-ம் தேதியான நாளை நாடெங்கிலும் நீட் தேர்வு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தருமபுரி மாணவர் ஆதித்யா என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்படி ஆதித்யா நீட் தேர்வு எழுத 2-ம் முறையாக விண்ணப்பித்திருந்த நிலையில் மாணவர் ஆதித்யா தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மாணவன் ஆதித்யா உருக்கமான கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

தர்மபுரியை சேர்ந்த மாணவன் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நாளை நீட் தேர்வு எழுத உள்ள நிலையில், தர்மபுரி இலக்கியம் பட்டியில் உள்ள தனது வீட்டில் இன்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி இலக்கியம் பட்டியைச் சேர்ந்த மணிவண்ணன் இவர் சேலம் மாவட்டம் பூசாரி பட்டியில் கடை ஒன்றை வைத்து பழைய டிராக்டர் மற்றும் அதற்கான உதிரி பாகங்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார்.

இவரது மகன் ஆதித்யா, (வயது 20) இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கான பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.

சேலம் குகை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் இவருக்கு நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை இலக்கியம் பட்டியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நாளை தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கான பயத்தின் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தர்மபுரி நகர போலீசார் பிரேதத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இந்த ஒருவாரத்தில்மட்டும் விக்னேஷ் மற்றும் ஜோதிஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அந்த வரிசையில் ஆதித்யாவும் இறந்துள்ளார். அதில் இன்று ஒரே நாளில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டதால் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மாதிரியான இறப்புகள் இனிமேல் நிகழாதபடிக்கு தமிழக அரசு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது

 308 total views