ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை!

குடியாத்தம்.
1-2-2018
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பகுதியை சேர்ந்த ஜீவா காய்கறி வியாபரம் செய்து வருகிறார் கடந்த 14, ஆண்டுகளுக்கு முன் ஹேமாவதி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதாகவும் இவர்களுக்கு கெஜலட்சுமி என்ற பெண்னும் ராஜேஷ் என்ற மகனும் உள்ளதாகவும் கடந்த சில நாட்களாக கணவண் மணைவி இடையே குடும்ப தகராரு ஏற்ப்பட்டு வந்ததாகவும் இதனால் சில நாட்களுக்கு முன் மனைவி அவரது தாய் வீட்டிற்க்கு சென்றுவிட்டதாகவும் மனமுடைந்த ஜீவா நேற்று 31,01,18, தனது மகள் கெஜலட்சுமி 7, வகுப்பு மாணவி மற்றும் மகன் ராஜேஷ் 2, வகுப்பு மாணவன் ஆகிய இருவரையும் பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறி சென்றவர்கள் வீடு திரும்பாதா நிலையில் பல இடங்களில் தேடியும் கிடைக்காத போது மூவரும் குடியாத்தம் அடுத்த மோர்தணா அணைக்கு சென்று பள்ளி புத்தக பை, அடையாள அட்டை ஆகியவற்றை கழற்றி வைத்துவிட்டு அணையின் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அப்பகுதியில் உள்ளவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் காவல்துறையினர் தேடிவந்தனர் இன்று மத்தியம் மூவரின் உடலும் தண்ணீர் மேல் பகுதியில் மிதந்ததை கண்டு மூவர் சடலத்தையும் மீட்ட குடியாத்தம் கிராமிய காவல்துறையினர் உடல்கூறு ஆய்விற்க்காக குடியாத்தம் அரசு மருத்துவமணைக்கு அனுப்பிய நிலையில் விசாரனை செய்து வருகின்றனர்.

குடியாத்தம் செய்தியாளர்
உமாசங்கர்

2,106 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close