வேலூர்-டிச-27

ஏலகிரி மலையில் சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 144 பயனாளிகளுக்கு அமைச்சர் வீரமணி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏலகிரிமலையில் உள்ள அத்தனாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமை தாங்கினார்.

மாவட்ட ஆட்சியர் பேசியது;

ஏலகிரி மலை சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தமிழக அரசு சார்பில் பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏலகிரி மலையில் உள்ள சுற்றுலா தலங்களை பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தி வருகிறோம். இனி வரும் காலங்களில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல புதிய திட்டங்கள் செயல் படுத்தப்படும். ஏலகிரி பகுதி மக்கள் வைக்கும் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என பேசினார்.

முகாமிற்கு சிறப்பு விருந்தினராக தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி கலந்து கொண்டு அரசு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள துறை சார்ந்த அங்காடிளை பார்வையிட்டார். அதன் பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி  பேசியது;

தமிழக அரசு சார்பில் ஏலகிரி மலை பகுதி மக்களுக்கு பல நல்ல திட்டங்களை எனது தொகுதி என்ற முறையில் கொண்டு வந்துள்ளேன், நான் ஒன்றிய குழுத்தலைவராக இருக்கும் போது இருந்து இந்த ஏலகிரி மலை பகுதிக்கு சாலை வசதிகள் செய்து தரப்பட்டது. அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் ஆனா பிறகு மிக சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் மாவட்டம் நிர்வாகம் சார்பில் கோடை விழா கொண்டாடப்படுகிறது. இது ஏழைகளின் ஊட்டி என்று கூறுவது மிகவும் தவறு காரணம் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சென்னை மற்றும் பெங்களூர், வேலூர்  போன்ற பெரிய நகர சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். ஏன் இந்தியா அளவில் புனோவுக்கு அடுத்த இடம் சாகச விளையாட்டு ஏலகிரி மலையில் தான் நடைப்பெறுகிறது. இனி வரும் காலங்களில் அனைத்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக ஏலகிரி மலை உருவாகும். திருப்பத்தூர் நகரத்தில் தற்போது நடைபெறும் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாலை வசதிகளுக்கு என நிதி ஒதுக்கப்பட்டது. கூடிய விரைவில் பாதாள சாக்கடை திட்டம் விரைந்து முடிக்கப்படும். ஏலகிரி மலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை மின்சார வாரியம் மூலம் ஒரு  துணை மின் நிலையம் கூடிய விரைவில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பனி விரைவில் நடைப்பெறும் என பேசினார்.

இதில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் கார்த்திகேயன், மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கஜேந்திரன், சமூக பாதுகாப்பு துறை துணை ஆட்சியர் பேபி இந்திரா, மாவட்ட வட்ட வழங்கல் துறை அலுவலர் ஜெயகுமார், பொது சுகாதார துறை துணை இயக்குநர் தேவபார்த்தசாரதி, சுமன், போக்குவரத்து துறை அதிகாரி குமரன், பள்ளி கல்வி துறை அலுவலர் மார்க்ஸ் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் கிருஷ்ணவேனி நன்றி கூறினார்.

செய்தியாளர்
சரவணன்

 337 total views