மாணவர்களுக்கான ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் சர்வதேச இயக்கம்  கோவை எஸ் எஸ் வி எம் பள்ளியில் துவக்கம் கோவை வெள்ளளூர் அருகில் அமைந்துள்ள எஸ். எஸ். வி. எம் பள்ளி குழுமத்தினரால் எஸ். எஸ். வி. எம் பள்ளியில்  மாணவர்களுக்கான ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் சர்வதேச இயக்கம் தொடங்கப்பபட்டது. இவ்விழாவிற்கு வருகைத் தந்த அனைவரையும் எஸ். எஸ். வி. எம் பள்ளியின்  மேலாண் பொறுப்பாட்சியர் திருமதி டாக்டர் மணிமேகலை மோகன் அவர்கள் வரவேற்றார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய தூதராக உறுப்பினர் டாக்டர். பிரகாஷ் ஷா, இந்திய தூதராக உறுப்பினர் ஸ்காட் டயால் ஏசியா காட் டாலன்ட் . சுதிர், துணைத் தலைவர் ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் சர்வதேச இயக்க திரு ரிஷிஜெயின், சிறப்பு விருந்தினர் பத்மஸ்ரீ பி. ஆர். கிருஷ்ணகுமார், பேராசிரியர் . கிருஷ்ணன் குட்டி,  பிரசாந்த பாலகிருஷ்ண நாயர், எஸ். எஸ். வி. எம் பள்ளி குழுமம், மேலாண் பொறுப்பாட்சியர் திருமதி டாக்டர் மணிமேகலை மோகன், எஸ். எஸ். வி. எம் பள்ளி குழும நிர்வாக அறங்காவலர் திரு. மோகன்தாஸ், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் சர்வதேச இயக்கம் உறுப்பினர்கள், பள்ளி முதல்வர்கள், 800 க்கும் மேற்பட்ட இளம் பங்கேற்பாளர்கள் மற்றும் பெற்றோர்களும் இத்தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். இந்த மாணவர்களுக்கான ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் சர்வதேச இயக்க அமைப்பில் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கான 16 குழுமங்களும், இடைநிலை பள்ளி மாணவர்களுக்கான 4 குழுமங்களும் இடம் பெற்றுள்ளது.  இதில் பங்கு பெறும் மாணவர்கள் பல்வேறு நாடுகளின் 20 முக்கிய பிரச்சனைகளை பற்றி ஆலோசித்து முடிவெடுக்க உள்ளனர். இவ்விழாவானது மூன்று தினங்கள் நடைபெற உள்ளது.

565 total views, 3 views today