எட்டு வழி சாலைக்கு ஏதிராக போராடி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி செங்கோட்டையில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

07-07-2018 ( தென்காசி )

எட்டு வழி சாலைக்கு ஏதிராக போராடி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி
செங்கோட்டையில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

செங்கோட்டையில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில்
சேலம் எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிராக போராடுவோர் கைது நடவடிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

செங்கோட்டை தாலூகா அலுவலம் அருகில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்க செங்கோட்டை கிளை சார்பில் சேலம் எட்டு வழிச்சாலைக்காக விவசாயிகளின் விளை நிலங்களை கையகப்படுத்தியதை கண்டித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக போராடிய மாநில விவசாய சங்க செயலாளர் ரவீந்தரன், மாவட்டத்தலைவர் சண்முகம், பழங்குடி மக்கள் சங்க மாநிலத் தலைவர் டெல்லிபாபு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி மற்றும் உள்ள தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் செய்ய கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐஎம்.தாலூக தலைவர் பரமசிவன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர்கள் சங்க தாலூக தலைவர் முத்துசாமி விவசாய சங்க தாலூகா செயலாளர் தம்பித்துரை ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

சிபிஐஎம். மாவட்டக்குழு உறுப்பினர் பால்ராஜ் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகி கசமுத்து,(கட்டுமானம்) சிபிஐஎம் கிளைச்செயலாளர்கள் பெருமாள், ஐயப்பன், மாரியப்பன், மாடசாமி, செய்யதுமசூது, விவசாய தொழிலாளர்கள் சங்க கமிட்டி உறுப்பினர்கள் மல்லிகா, செல்லத்தாய் டிஒய்எப்ஐ நிர்வாகி பழனி, தொழிற்சங்க நிர்வாகி சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

( மீடியா 7 செய்திகளுக்காக
தென்காசி செய்தியாளர் வீரமணி )

33 total views, 3 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close