ஊற்று நீரை குடித்து வாழும் புறகரை கிராம பொது மக்கள்..!

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் ஆர்.எஸ் மங்களம் அருகே உள்ள உப்பூர் மீனவகிராமம் அதன் 2 கிலோமீட்டர் தொலைவில் வானம் பாத்த விவசாய பூமி புறகரை கிராமம். முழுக்க முழுக்க விவசாயிகள்,விவசாய கூலிகள் நிறைந்த கிராமங்கள்.

பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் இந்த கிராமத்திற்கு எட்டாக்கனி யாகிப் போனது.

புறகரை கிராம மக்கள் பகுதி ஊர்களில் காய்ந்து போன ஊரணிகள், குளங்களில் குழிகள் தோண்டி ஊற்றை ஏற்படுத்தி குடிநீர் ஆதாரங்களை அமைத்து வருகிறார்கள்.

ஒரு குடம் ஊற்று தண்ணீர் பிடிக்க பல மணி நேரம் ஆகின்றது.குடிப்பதற்கு தகுதியான நீரும் இல்லை அது இப்படி சுத்திகரிக்கப்படாத ,குடிக்க தகுதியற்ற நீரை பருகுவதால் பல விதமான நோய்களுக்கு ஆளாகி பொதுமக்கள் அல்லல் படுகிறார்கள்.

அரசியல் சாசனம் வழங்கும் அடிப்படை உரிமைகள் கூட கிடைக்காமல் அவதிப்படும் மக்களுக்கு விடிவு எப்போது..?
மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தின் 30 கி.மீ தொலைவே இக்கிராமம் அமைந்துள்ளது.20 நிமிட பயண தூரத்தில் அவல நிலை கிராம மக்கள்.. சமூக வலை தளங்கள் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தும் அதிகாரிகளை வேலை வாங்கும் ஆட்சியர் உறங்குகிறாரா?
சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மீடியா 7 செய்திக்காக
செய்தியாளர்
முகவை-அப்துல்லாஹ்

81 total views, 6 views today

Top

Registration

Forgotten Password?

Close