ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி- மு.க.ஸ்டாலின்

0
0
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி- மு.க.ஸ்டாலின் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளதாக, மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் கட்சி ரீதியாக நடைபெற்ற பதவி இடங்களுக்கான தேர்தலில் பெரும்பான்மை இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நேற்று மதியம் 2 மணிக்கும், நள்ளிரவு 11 மணிக்கும் என இரு முறை மாநில தேர்தல் ஆணையரைச் சந்தித்ததையும் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். வெற்றி பெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளை மனமார வாழ்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார். திமுக கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சிறப்போடும், நியாயமாகவும் நேர்மையோடும் செயல்படுவார்கள் என உறுதியளித்துள்ளார்.

138 total views, 9 views today