கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உட் கோட்டத்திற்கு உட்பட்ட எல்லையில் அமைந்துள்ளது காப்புக் காடு.

இந்த காப்புக் காட்டில் அரியவகை உயிரினங்கள் மான்கள் தேசிய பறவையான மயில்கள் மற்றும் காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது.

இந்நிலையில் அதனை அழிக்கும் விதமாக சில சமூக விரோதிகள் கள்ளத் துப்பாக்கிகள் மூலம் வேட்டையாடி அழித்து வருகின்றனர்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் வேட்டை யாளர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் அவர்களின் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் எழிலரசி தலைமையில் எலவனாசூர்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் முதல் நிலை காவலர்கள் மதுரைவீரன் இளந்திரையன் பார்த்திபன் சுபாஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு வேட்டைக்காரர்கள் பிடிக்கும் பொருட்டு அவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் 14 .12 .19 ம் தேதி எறையூர்- அதையூர் ரோட்டில் உள்ள காட்டு கோயில் அருகே கைகள் கள்ள நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த எறையூர் கிராமத்தைச் சேர்ந்த டோனி என்கிற அந்தோணி புஷ்பராஜ் த/பெ மரியே சாமி அந்தோணிசாமித/பெ லூர்துசாமி ஜோசப்ராஜ் த/பெ அல்போன்ஸ் லியோ பிரகாஷ் த/பெ செல்வராஜ் ஜான் ரொசரியோ த/பெ ஆரோக்கியசாமி அவர்களை கைது செய்தும் மேற்கண்ட நபர்களுக்கு கள்ளத்துப்பாக்கி செய்து விற்பனை செய்த சின்னசேலம் வட்டம் நாக குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் ஊமையன் என்கிற துரைசாமியை கைது செய்து அவரிடமிருந்து 8 நாட்டுத்துப்பாக்கி துப்பாக்கி செய்யக்கூடிய 9 பேரல்கள் இரண்டு கடைகள் மற்றும் துப்பாக்கி செய்ய பயன்படுத்தும் கருவிகள் போன்றவற்றை கைப்பற்றினர்.

 1,084 total views