உலக சாதனைக்கு திருவண்ணாமலை மாவட்டம் 3 இலட்சம் மாணவர்கள் பங்கேற்க போகிறார்கள்

உலக சாதனைக்கு திருவண்ணாமலை மாவட்டம் 3 இலட்சம் மாணவர்கள் பங்கேற்க போகிறார்கள் . . . . .

திருவண்ணாமலை. ஏப். 18 :
திருவண்ணாமலையில் உள்ள அரசு பள்ளிகளில் 19 ஆம் தேதி 3 இலட்சம் மாணவ – மாணவிகள் தமிழ் செய்தித்தாள் வாசித்தல் உலக சாதனை படைக்க தயாராகி வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் அரசுப் பள்ளிகள் அதிகமாகவுள்ள மாவட்டம் இத்தகைய அரசுப் பள்ளிகளில் கிராமப்புறத்தில் வசித்து பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ள பெற்றவர்களின் பிள்ளைகள் படித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை கல்வியிலும் தேர்ச்சி சதவிதத்திலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என ஆட்சியர் கே. எஸ். கந்தசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன்படி திருவண்ணாமலை தாலுகா மங்கலம் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் மங்கலம் புதூர், மங்கலம், மணிமங்கலம், கீழ்பாலானந்தல், கருமாரப்பட்டி, மாயாங்குளம், இராமநாதபுரம், ஆகிய பள்ளிகளிலிருந்து மொத்தம் 916 மாணவ – மாணவிகளுக்கு புதன்கிழமை செய்தித்தாள் வழங்கப்பட்டு 15 நிமிடங்கள் ஐந்து வகையான செய்திகள் வாசிக்க செய்தும் 5 நிமிடங்கள் வாசித்த செய்தி பற்றிய குறிப்பு எழுதிட பயிற்சி அளிக்கப்பட்டது.

205 total views, 3 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close