உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கையெழுதிட்டு துவக்கி வைத்தார்.

உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் ஒன்றாம் தேதி அனுசரிக்கபடுகிறது.
இதனையொட்டி தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் சங்கம் மற்றும் கோயமுத்தூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு மையம் சார்பில் நடைபெற்ற பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது.முன்னதாக எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தில் கையெழுத்து மற்றும் எச்.ஐ.வியுடன் வாழ்பவர்களை புறகணிக்க கூடாது என உறுதிமொழி எடுக்கபட்டது.

இந்த பேரணியில் ஜி.டி மெட்ரிக் பள்ளி மாணவர்களின் பேண்ட் இசையுடன் துவங்கிய இந்த பேரணியில் அரசு மருத்துவ கல்லூரி,கொங்குநாடு,ராமகிருஷ்ணா,கே.ஜி,கங்கா மருத்துவமனை நர்சிங் கல்லூரி மாணவர்கள் மற்ரும் ஜி.ஆர்.டி பிஷப் அப்பாசாமி கல்லூரி நாட்டு நல பணி மாணவ மாணவியர் 300கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பான ரத்தத்தை தானம் செய்ய வேண்டும்,எய்ட்ஸ் வரும் முன் காப்போம்,எச்.ஐ.வியால் பாதிக்கபட்டவர்களை ஆதரித்து அரவணைக்க வேண்டும் என்ற பதாகைகளை ஏஅந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில் எச்.ஐ.வி தொடர்பாக தற்போது பெரும் விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளதாகவும் கோவை மாவட்டத்தில் கடந்த 2006-2007 பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 3.05% இருந்து தற்போது 0.28% குறைந்துள்ளதாக தெரிவித்தனர்.

 260 total views,  2 views today