உலகிலேயே முதல்முறையாக பிரமோஸ் ஏவுகணை இந்திய போர் விமானங்களில் இணைக்கப்படுகிறது; ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் தகவல்

இந்திய-ரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் உருவான பிரமோஸ் ஏவுகணை, பல்வேறு கட்டங்களாக சோதனை செய்து பார்க்கப்பட்டு வருகின்றன. தொடர் வெற்றிகளால், இந்திய ராணுவத்தில் தரைப்படை மற்றும் கடற்படையில் பிரமோஸ் ஏவுகணைகள் சேர்க்கப்பட்டு வருகின்றன.

290 கிலோ மீட்டர் தூரம் வரை, சுமார் 300 கிலோ அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் வல்லமை வாய்ந்த பிரமோஸ் ஏவுகணைகள் ஒலியை விட அதிவேகத்தில் செல்லும் சிறப்புடையதாகும். இந்நிலையில், சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணை, அரபிக் கடற்பகுதியில் இருந்து வெற்றிக்கரமாக இரு நாட்களுக்கு முன் சோதனை செய்து பார்க்கப்பட்டது. ஐ.என்.எஸ். கொச்சி போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, துல்லியமாக சென்று இலக்கினை தாக்கியது. இத்துடன், பிரமோஸ் ஏவுகணை 49-முறை சோதனை நடத்தியுள்ளது.

இந்நிலையில், பிரமோஸ் ஏவுகணையை விமானங்களில் இணைக்கும் வகையில் முதல்முறையாக சுகோய் 30 போர் விமானத்தை மாற்றி அமைத்து உருவாக்கியிருந்தது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனம். விரைவில் இந்திய போர் விமானங்களில் அதிவேக சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணையை இணைக்க இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 3 ஆயிரம் கிலோ எடையுடைய ஏவுகணையை உலகிலேயே முதல்முறையாக போர்விமானங்களில் இணைப்பது இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

794 total views, 4 views today