உற்சாகமான ஏற்பாட்டில் சமாதானக் கலை விழா 2017

09.04.2017, ஞாயிறு அன்று மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் மாலை 4 மணிக்கு சென்னை ஆர்ட் ஆஃப் பீஸ் பவுண்டேஷன் சார்பாக சமாதானக் கலை விழா 2017 என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மகிழ்வாய் மனமே! என்ற தலைப்பில் அறிவரங்கமும், பிம்பம் என்ற குறும்பட துவக்க நிகழ்ச்சியும், நாளை..? என்ற ஆவணப்பட துவக்க நிகழ்ச்சியும், உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியும், சமாதான ஆளுமை விருது வழங்கும் நிகழ்ச்சியும் சமாதானக் கலை விழாவில் இடம்பெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சுபாஷ் அவர்களும், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவரும், தமுமுக-வின் மூத்த தலைவருமான செ. ஹைதர் அலி அவர்களும்,

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் முதன்மைத் துணைத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் அவர்களும், திரைப்படத் தயாரிப்பாளர் அ.ஃபக்ருதீன் அவர்களும், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.எம். ஸலாஹுதீன் அவர்களும், மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில தலைவர் செல்லபாண்டியன் அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
சமூக ஒற்றுமை மேம்பாட்டிற்காக வழங்கப்படும் சமாதான ஆளுமை விருது புதுச்சேரி மக்கள் உரிமை கூட்டமைப்பின் செயலாளர் தோழர் கோ.சுகுமாரன் அவர்களுக்கு இந்த விழாவில் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே 2015-ம் ஆண்டு சென்னையிலும், 2016-ம் ஆண்டு கோவையிலும் சமாதானக் கலை விழா சிறப்பாக நடத்தப்பட்டு, அதில் கலந்துக்கொண்டு மக்கள் பயனடைந்ததைப் போன்று இந்த விழாவிலும் கலந்துக்கொண்டு பயனடையுமாறு ஆர்ட் ஆஃப் பீஸ் பவுண்டேஷனின் தலைவர் ஹுஸைன் பாஷா மற்றும் பொதுச்செயலாளர் பொறியாளர் கீழை இர்பான் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஊடக ஒருங்கிணைப்பு பணிகளை மீடியா 7 வெப் டிவி மற்றும் ரைட் பிரதர்ஸ் மீடியா நிறுவனத்தினர் செய்து வருகின்றனர். விழாவின் நிகழ்வுகளை www.media7live.in, www.Facebook/media7webtv.in ஆகிய தளங்களில் நேரலையில் காணலாம்.

4,435 total views, 4 views today

Top

Registration

Forgotten Password?

Close