உயிர் அமைப்பு சார்பில் கோவை சிக்னல்களில் அதிநவீன கேமராக்கள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைக்கிறார்

கோவை, பிப்.15 கோவையில் சாலை விதிமீறல்களை கட்டுப்படுத்த அதிநவீன கேமராக்கள் கோவை சிக்னல்களில் நிறுவப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நாளை மாலை 6 மணி அளவில் அண்ணா சிலை சிக்னல் அருகே நடைபெற உள்ளது. அதிநவீன கேமராக்களை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கிவைக்கிறார். நிகழ்ச்சி குறித்து அமைப்பின் நிர்வாகிகள் டாக்டர் ராஜசேகர், விஜய் மோகன், கிருஷ்ணன் ஆகியோர் கூறுகையில், கோவையை விபத்தில்லா நகரமாக மாற்ற தொழில்முனைவோர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட கோவை மக்களின் உதவியோடு  சமூக அக்கறையுடன் தொடங்கப்பட்டது உயிர்  அமைப்பு. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்நிலையில் கோவையில் சாலை விதி மீறல்களை கட்டுப்படுத்த அதிநவீன கேமராக்களை ரூபாய் 4.5 கோடி மதிப்பில் அமைப்பு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறும். இடங்களின் விவரங்கள் அறியப்பட்டு முதல் கட்டமாக ஜே.எம். பேக்கரி சந்திப்பு, எல்.ஐ.சி சந்திப்பு குப்புசாமி மருத்துவமனை சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு, லட்சுமி மில் சந்திப்பு உள்ளிட்ட ஐந்து இடங்களில் அதிநவீன சாலை பாதுகாப்பு உபகரணங்கள், சி.சி.டி.வி கேமராக்கள், தடுப்பரண்கள், குறியீட்டு பலகைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் எஸ். பி வேலுமணி தொடங்கிவைக்கிறார். விதிமீறல்களை கட்டுப்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி ஆதாரங்களுடன், விதிமீறல்கள் குறித்து குற்றம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அளவில் விபத்துக்களால் மரணம் அடையும் கோவையில் குறைய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து முக்கிய சாலைகளில் உள்ள 40 சந்திப்புகளிலும் மேலும் பொதுமக்கள் பங்களிப்புடன் 130 இடங்களிலும் அதிநவீன கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும் என்றனர்.

431 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close