உக்ரைனில் ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதில் ஐந்து பேர் பலி

உக்ரைன் நாட்டில் சிறிய ரக ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதில் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு பைலட்களும், மூன்று பயணிகள் என மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சோவியத் வடிவமைத்த Mi-2 ரக ஹெலிகாப்டர் ரமாடோஸ்க் பகுதியை கடக்கும் போது வெடித்து சிதறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் பெரும்பாலும் மின் கம்பத்தில் உரசியதாலேயே வெடித்திருக்க கூடும் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் வெடித்த விபத்தில் ஐந்து பேர் பலியாகியிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

278 total views, 2 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close