உக்கடம் பகுதியில் குடும்பத்தகராறில் தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை

September 10, 2015 0 By admin
கோவை உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக்பரீத் (வயது 30). தள்ளுவண்டியில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார்.
கரும்புக்கடையைச் சேர்ந்தவர் சகானா. இவர்களது திருமணம் கடந்த 7 ஆண்டுக்கு முன்பு நடந்தது. இவர்களுக்கு ரிஸ்வான் (6), ரசீத் (3½) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்– மனைவிக்கிடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த சகானா கணவருடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் ஷேக்பரீத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை தான் ஷேக்பரீத் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பெரியகடை வீதி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை கணபதி நஞ்சப்ப கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் கணேசன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி லோக நாயகி (45). கடந்த ஆண்டு கட்டிட வேலையில் ஈடுபட்ட கணேசன் தவறி விழுந்து விட்டார். அதன் பின்னர் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை.
சிகிச்சைக்காக கடன் வாங்கியிருந்தனர். அதனையும் அவர்களால் திருப்பி செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் கணவன்– மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனவேதனை அடைந்த லோகநாயகி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

1,213 total views, 2 views today