இலங்கையின் குண்டுவெடிப்பு :கோவை அனைத்து திருச்சபைகள் சார்பாக கிறிஸ்துவ ஆலயத்தில் அஞ்சலி

இலங்கையின் குண்டுவெடிப்பு :கோவை அனைத்து திருச்சபைகள் சார்பாக கிறிஸ்துவ ஆலயத்தில் அஞ்சலி இலங்கையில் நடந்த வெடிகுண்டு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு கோவை மாவட்ட அனைத்து திருச்சபைகள் சார்பாக கிறிஸ்துவ ஆலயத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதில், 100-க்கணக்கான கிறிஸ்துவர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த நிலையில், குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களின் ஆன்மா இளைப்பாறவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆண்டவர் ஆறுதல் அளிக்க வேண்டியும், கோவை அவினாசி சாலையில் உள்ள இயேசு அழைக்கிறார் ஜெப மையத்தில் 200க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.கோவை மாவட்ட அனைத்து திருச்சபைகள் இணைந்து நடத்திய இதில் ரோமன் கத்தோலிக்,சி.எஸ்.ஐ, .டி.இ.எல்.சி சபைகள் மற்றும் பெந்தோகெஸ்தே ஊழியர்கள்,சுவிசேஷ ஐக்கியம் உட்பட அனைத்து கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஜபங்கள் வாசித்தப்படி, தேவாலயத்தில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.இதில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்….

424 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close