இராமநாதபுரத்தில் செயல்படாத இ சேவை மையம் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டுவரும் இ-சேவை மையத்தில் கடந்த ஒரு மாதமாக பொதுமக்கள் அலைக்கழிப்பு.:-

சாதி,இருப்பிடம்,வருமானம் போன்ற அடிப்படையான சான்றிதழ்கள் கூட எடுக்க முடியாமல் பள்ளி மாணவர்கள் முதல் பட்டதாரிகள் வரை கடும் அவதி.இது பற்றி சேவை மையத்தில் பணிபுரியும் சகோதரியிடம் கேட்கும்போது நாங்கள் பலமுறை தாசில்தாரிடம் கூறிவிட்டோம் ஆனால் எங்களுக்கு சரிசெய்து தரவில்லை என கூறுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் இந்த சேவை மையத்தில் பணிபுரியும் பணியாட்கள் அலட்சியமாக பதில் கூறுகின்றனர்.படிப்பறிவு இல்லாத தாய்மார்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மணுகொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மீடியா 7 செய்திக்காக
செய்தியாளர்:
முகவை அப்துல்லாஹ்

90 total views, 3 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close