இரண்டு குழந்தைகளின் தாய் மாயம் கணவர் போலிசில் புகார்

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகே எலுமிச்சங்கிரி பகுதியைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மனைவி சுஜாதா (38). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சுஜாதா கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிப்பவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 14ம் தேதி காலை வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு இடங்களில் தேடியும் சுஜாதா கிடைக்கவில்லை. இதுகுறித்து சின்னதம்பி கொடுத்த புகாரின்பேரில், மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிந்து சுஜாதாவை தேடி வருகின்றனர்.

560 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close