குடவாசல்.ஜூலை,6.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள பூந்தோட்டத்தில் இந்திய வாலிபர் சங்கத்தின் பூந்தோட்டம் கிளை சார்பாக தோழர் அசோக் நினைவாக வெள்ளிக்கிழமையன்று பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கினர்.

கடந்த மாதம் 4 ஆம் தேதி நெல்லையில் ஆதிக்க சாதியினரால் படுகொலை செய்யப்பட்ட நெல்லை மாவட்ட பொருளாளர்.தோழர்.அசோக் நினைவாக 1000 மரக்கன்றுகள் பூந்தோட்டம் பள்ளிவாசலில் ஜிம்மா தொழுகை முடிந்து வந்த இஸ்லாமிய சகோதரருக்கு,பொது மக்களுக்கும் வழங்கப்பட்டு பல்வெறு இடங்களில் வாலிபர் சங்கம் சார்பாக நடப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்திய மாவட்ட தலைவர் சலாவுதீன் கூறும்போது புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்ற மார்க்சிய தத்துவார்த்த வழிகாட்டுதல் அடிப்படையில் தோழர் அசோக் நினைவையொட்டி இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறினார்.
நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர்.எஸ்.எம்.சலாவுதின் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர்.ரிசாலத் முன்னிலை வகித்தார்.சிபிஎம் கட்சியின் உறுப்பினர்.சேட் ,இப்ராஹிம் மற்றும் வாலிபர் சங்கத்தினர் பிச்சுமணி,மாதவன், மன்சூர், கணேஷ், சாந்தி,ஜாபிர்,சல்மான், அஸ்மின், அசாருதீன், ரிபாய்ஸ், உள்ளிட்டோர் மற்றும் பல தோழர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுடனர்.

460 total views, 3 views today