அமெரிக்காவில் இந்திய மாணவரைச் சுட்டுக் கொன்றவர் போலீசாரிடம் சரணடைந்தார்.

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள குவெம்பு நகரை சேர்ந்த அபிஷேக் சுதேஷ் பட் என்பவர் மைசூரில் பொறியியல் முடித்தபின் மேல்படிப்புக்காக கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் அமெரிக்கா சென்றார்.

அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். மேலும், பகுதிநேரமாக அங்குள்ள சாலையோர உணவு விடுதி ஒன்றில் வேலை பார்த்தும் வந்தார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் மர்ம நபர் ஒருவர் கைத்துப்பாக்கியால் சுட்டதில் அபிஷேக் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அபிஷேக்கைச் சுட்டுக் கொன்றதாக போலீசாரிடம் சரணடைந்த எரிக் ட்யூனர் என்பவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 227 total views,  4 views today