அரியலூர் ரயில் நிலையம் முன்பு அரியலூர்_ பெரம்பலூர் மாவட்ட சிஐடியூசி தொழிற்சங்கத்தினர் சார்பில் இந்திய ரயில்வே துறையை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியுசி மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார் .எல்ஐசி லிகாய் முகவர்கள் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், மாதவி, தமிழ்நாடுஅரசுபோக்குவரத்துக்கழக சிஐடியூசி தொழிலாளர் பிரிவு சந்தானம் உள்ளிட்டோர்முன்னிலை வகிததனர். இந்திய அளவில்225 ரயில்கள், அதில்அதிக லாபம் ஈட்டும் 109 ஏழைகள் பயணிக்கும் ரயில்களை தனியார் விற்கும் முடிவினையும் குறிப்பாக அவற்றில் தமிழ்நாட்டில் 25 ரயில்களள தனியாருக்கு விற்கும் முடிவினையும் கைவிட வேண்டும் மேலும்தற்போதுகொரோனாதடுப்புஊரடங்கின் போது ராணுவ தடவாளஉற்பத்தி, நிலக்கரி, மின்சாரம்,தகவல்தொலைத்தொடர்பு, இன்ஷூரன்ஸ் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை அவசர அவசரமாக தனியாருக்கு தாரை வார்க்கும் மோடி அரசின் மக்கள் விரோத முடிவினையும், சமூகநீதிப் பறிப்பு நடவடிக்கையும் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் துரை .அருணன், கட்டுமான தொழிலாளர் சங்கபிரிவு நிர்வாகிகள்வெள்ளைமுத்து, மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 134 total views,  2 views today