இந்தியா வந்துள்ள ஜப்பான் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை மந்திரிகள் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்

புதுடெல்லி:

இந்தியா-ஜப்பான் 13-வது ஆண்டு உச்சி மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜப்பானில் நடைபெற்றது. இருதரப்பு பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அம்மாநாட்டில் பங்குபெற்ற பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது.

அவ்வகையில், இந்தியா வந்துள்ள ஜப்பான் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை மந்திரிகள் அடங்கிய குழுவினர் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது இந்தோ-பசிபிக் பிராந்திய நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டன.

இதையடுத்து, ஜப்பான் பாதுகாப்புத்துறை மந்திரி டரோ கோனோ பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி டொஷிமிட்சு மொடெகி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்திக்க உள்ளார்.

 201 total views,  2 views today