கொல்கத்தா,

இந்தியா – வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாக நடைபெறுகிறது.

போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது. வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் போட்டியை நேரில் காண வந்துள்ளனர்.

டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் மொமினுல் ஹாக் பேட்டிங்கை தேர்வு செய்தார். போட்டியின் முதல் பிங்க் நிற பந்தை இந்திய அணி வீசுகிறது.

228 total views, 3 views today