இந்தியாவில் புதிய நாடாளுமன்ற வளாகம் ?

இந்தியாவில் புதிய நாடாளுமன்ற வளாகம் ?

1500 உறுப்பினர்கள் அமரும் வகையில் முக்கோண வடிவில் நாடாளுமன்ற புதிய வளாகம் கட்டப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக மத்திய அரசிடம் அகமதாபாத்தை சேர்ந்த ஹெச்.சி.பி. டிசைன் எனும் கட்டிட வரைகலை நிறுவனம் திட்டம் சமர்ப்பித்துள்ளது. 900 உறுப்பினர்கள் அமரும் வகையில் மக்களவை மைய பகுதியும், 1350 உறுப்பினர்கள் அமரும் வகையில் நாடாளுமன்ற மைய பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்திட்டத்தில் சவுத் பிளாக்கின் பின்புற பகுதிக்கு பிரதமரின் இல்லத்தை இடமாற்றுவது, நார்த் பிளாக்கின் பின்புற பகுதிக்கு குடியரசு துணைத் தலைவரின் இல்லத்தை இடமாற்றுவது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற மைய பகுதியை வடிவமைத்த குழுவின் தலைவரான பிமல் படேல் ((Bimal Patel)), தற்போது எம்பிக்கள் அமரும் வரிசைகளில் முதல் 2 வரிசையில் மட்டுமே மேஜைகள் இருப்பதாகவும், புதிய வளாகத்தில் அனைத்து வரிசையிலும் மேஜைகள் இருக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்

248 total views, 3 views today