இந்தியாவிலேயே தமிழக உள்ளாட்சிதுறைதான் மிக சிறப்பாக செயல்படுகிறது அமைச்சர் வேலுமணி பெருமிதம்…….

March 11, 2018 0 By குடந்தை யாசீன்

இந்தியாவிலேயே தமிழக உள்ளாட்சிதுறைதான் மிக சிறப்பாக செயல்படுகிறது அமைச்சர் வேலுமணி பெருமிதம்…….

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்ள வந்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செயதியாளர்களிடம் பேசும் போது மத்திய மாநில திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழக உள்ளாட்சி துறை மிக சிறப்பாக செயல்படுகிறது ….

குறிப்பாக நூறுநாள் வேலை திட்டம் மற்றும் ஊரகபகுதிகளில்  குழாயில் குடிநீர் வழங்குவதிலும் தமிழகம் மிக சிறப்பாக செயல்படுகிறது…..

காவேரி மேலாண்மை அமைப்பதில் தமிழக அரசு உறுதியாய் உள்ளது தமிழகத்தின் உரிமைகளை எந்த சமயத்திலும் விட்டு கொடுக்க மாட்டோம்…..

பல தன்னிகரில்லாத சீர் திருத்தங்களை  தந்த தமிழகத்தின் தந்தை பெரியார் இது குறித்து முதல்வர்.துணை முதல்வர் தங்கள் கருத்துகளை ஏற்கெனவே தெரிவித்துள்ளனர்……

நீலகிரி மாவட்டத்தின் மீது முன்னால் முதல்வர் ஜெயலலிதாவும் .தற்போதையமுதல்வரும் தனி பாசம் வைத்துள்ளனர் மாவட்டத்திற்கு தேவையான அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் நிறை வேற்றப்படும் என கூறினார்…..

முன்னதாக மாவட்ட எல்லையான பர்லியார்.காட்டேரி.குன்னூர் மற்றும் மாவட்ட அலுவலகம் அமைந்துள்ள சேரிங்கிராஸ் பகுதிகளில் மாவட்ட செயலாளரும்.ராஜ்யசபாஉறுப்பினருமான கே.ஆர்.அர்ஜீணன் தலைமையில் சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்ட்டது

 வரவேற்ப்பில் மாவட்ட பாசறை மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத்.பாசறை நகர செயலாளர்அக்கீம்பாபு.நகர செயலாளர்கள் தேவராஜ்.சரவணகுமார்.கண்டோண்மெண்ட் துணை தலைவர் பாரதியார்.முன்னால் நகர செயலாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்……

மீடியா7 செய்திக்காக
ஊட்டி வெங்கடேஷ்

1,677 total views, 2 views today