இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 6 புள்ளி 1 சதவீதமாக இருக்கும் என பன்னாட்டு நிதியமான ஐ.எம்.எப். குறைத்து கணித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 3 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வளர்ச்சி விகிதத்தை 1 புள்ளி 2 சதவீதம் குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் உண்மையான வளர்ச்சி விகிதம் 6 புள்ளி 8 சதவீதமாக இருந்தது.

2019ல் அது 6 புள்ளி 1 சதவீதமாக இருக்கும் என ஐ.எம்.எப். கணித்துள்ளது.ஆயினும் அடுத்த ஆண்டு இந்திய பொருளாதாரம் ஏழு சதவீதமாக வளர்ச்சி பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவுடன் இந்தியாவும் சீரிய வளர்ச்சி விகிதத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது என்றும் ஐ.எம்.எப்.தெரிவித்துள்ளது.

267 total views, 3 views today