ஆவூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆவூரில் மத்திய பிஜேபி அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஜமாத் தலைவர் அசன் பஷீர் தலைமை தாங்கினார்.

ஆவூர் தலைமை இமாம் அப்துல் காதர் ரஹ்மானி கிராத்அத் ஓதி துவங்கி வைத்தார். கோவிந்தகுடி பள்ளி தாளாளர் அப்துல் லத்திப்
வரவேற்புரை ஆற்றினார்.
வலங்கைமான் திமுக ஒன்றிய செயலாளர் அன்பரசன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆடுதுறை சாஜஹான், வலங்கைமான் ஒன்றிய திராவிட கழக தலைவர் சந்திரசேகர் ஆகியோர் உரையாற்றினார்கள், குடந்தை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் தமிமுன் அன்சாரி மிஸ்பாஹி, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை பாதுஷா ஆகியோர் சிறப்புரையாற்றினர்,

நாகர்கோயில் கலாச்சார பள்ளி தலைமை இமாம் சவுக்கத் அலி உஸ்மானி,  திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழ் பிரசன்னா ஆகியோர் கண்டன உரையாற்றினர் நிகழ்ச்சிக்கு நிறைவாக ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் கோவிந்தராஜ் நன்றியுரை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கான கலந்து கொண்டனர்.

முன்னதாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள CAA என்னும் புதிய குடியுரிமை திருத்த சட்டம் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்திய மக்களை பிரித்து பாகுபாடு காட்டி அரசியல் சாசனத்தின்  14 மற்றும் 15 ஆகிய பிரிவுகளுக்கு எதிராகவும் அமைந்துள்ள இச்சட்டத்தை இக்கூட்டம் கண்டிக்கிறது.

சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு எதிராகவும் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் இயற்றப்பட்ட காட்டுமிராண்டித்தனமான CAA திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. CAA குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்ற மாநில அளவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் திமுக மற்றும் பாமக உறுப்பினர்கள் வாக்குகளால் தான் இது சட்டமாக்கப்பட்டது இந்த இரு கட்சிகளின் துரோகத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.  இச்சட்டம் நிறைவேற முழு காரணமாக இருந்த அதிமுக அதற்கு பரிகாரமாக இச்சட்டத்தை கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

CAA,NRC,NPR ஆகிய சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் என்னவாகுமோ என்று அனைத்து சமுதாய மக்களும் பீதி அடைய வேண்டாம் எந்த சக்தியாலும் எம்மை வெளியேற்ற முடியாது வலுக்கட்டாயமாக நம்மை வெளியேற்ற முயன்றால் காந்தி வழியை விட்டு விட்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வழியில் களமிறங்கி நமது குடியுரிமையை உறுதி செய்ய தயங்க மாட்டோம். உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

630 total views, 3 views today