ஆவடி அருகே பொறியியல் மாணவர் கல்லூரி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.1

ஆவடி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர் கல்லூரி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அடுத்த வீராபுரத்தில் செயல்ப்பட்டு வருகிறது வேல்டெக் கல்லூரி. தனியார் பொறியியல் கல்லூரியான இதில் திருத்தணியை சேர்ந்த வெங்கடபதி /56 என்பவரின் இளைய மகன் புருஷோத்தமன்/18 பி.இ முதலாமாண்டு படித்து வந்தார். வழக்கம்போல் இன்று காலை கல்லூரி சென்ற புருஷோத்தமன் கல்லூரி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. கல்லூரியில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவனின் உயிர் பிரிந்தது.இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த மாணவனின் பெற்றோர் புருஷோத்தமன் உயிர் இழப்பில் சந்தேகம் இருப்பதாக ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே கல்லூரியில் ஆல்டிக்கெட் வாங்க வந்த மாணவன் புருஷோத்தமன் கல்லூரி வளாகத்தில் சக மாணவிகளுடன் பேசிக்கொண்டு இருந்ததால் அங்கிருந்த கல்லூரி பேராசிரியர் மாணவனை கண்டித்து அடுத்ததாதால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.கல்லூரி வளாகத்தில் மாணவன் உயிர் இழந்த சம்பவம் சக மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆவடி நிருபர்
கார்த்திக்
கண்ணியப்பன்AN

121 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close