“ஆரோக்கியமான மக்கள்! வலிமையான தேசம்!!” – தேசிய பிரச்சார துவக்க நிகழ்ச்சி!

“ஆரோக்கியமான மக்கள்! வலிமையான தேசம்!!” – தேசிய பிரச்சார துவக்க நிகழ்ச்சி! சென்னையில் ‘மராத்தான்’ – அழைக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட்

இந்திய தேசத்தில் விளிம்பு நிலையில் வாழ்ந்து வரும் மக்களை அனைத்து வகையிலும் சக்திபடுத்திட வேண்டுமென்ற நோக்கில் தேசிய அளவில் செயல்பட்டு வரும் சமூக இயக்கம் தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. தேசம் மற்றும் சர்வதேசம் குறிப்பாக தமிழகம் எதிர் கொண்டிருக்கக்கூடிய சமூக பிரச்சினைகள், சவால்கள், சங்க பரிவார பாசிஸ்டுகள் செய்து வரும் பிரிவினைவாத சூழ்ச்சிகள் என பல சமகால நிகழ்வுகளில் தலையிட்டு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதுடன் தன்னுடைய ஜனநாயக கடமையையும் நிறைவேற்றி வருகின்றது பாப்புலர் ஃப்ரண்ட்.

ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்

அதன் ஒரு பகுதியாக ஆரோக்கியமான வாழ்விற்கு உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திடும் பிரச்சாரம் வருடந்தோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்படுகின்றது. இப்பிரச்சாரத்தில் ஆரோக்கியம் குறித்த கையேடுகள் விநியோகம், மராத்தான் ஓட்டம், விளையாட்டுப்போட்டிகள், மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

2016-ம் வருடத்திற்கான “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தேசிய துவக்க நிகழ்ச்சியாக 5 கி.மீ சாலை ஓட்டம் (மராத்தான்) நவம்பர் 13 காலை 07.00 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் பங்கெடுத்து வலிமையான தேசத்தை கட்டமைக்கும் பாப்புலர் ஃப்ரண்டின் பணியில் தங்களை இணைத்து கொள்ள அழைப்பு விடுக்கின்றது. நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் M.முஹம்மது அலி ஜின்னா, மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில், மாநில பொதுச்செயலாளர் M. முஹம்மது சேக் அன்சாரி மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (05-11-2016) காலை 11.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில், மாநில செயற்குழு உறுப்பினர் H. முஹம்மது அலி ஜின்னா மற்றும் வட சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

657 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close