ஆரல்வாய்மொழியில் 
வேளாண்மை கூட்டுறவு வங்கியின் எதிர்புறம் உள்ள நெடுஞ்சாலையில்  இருந்து ஓரு மலைப்பாம்பு ஒன்று
இரவு நேரத்தில் மெதுவாக ஊர்ந்தபடியே ரோட்டை கடந்து வந்துள்ளது.
இதனை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை நிறுத்தி உள்ளனர். பின்னர் அந்த மலைப்பாம்பு பக்கத்தில் உள்ள
வேளாண்மை கூட்டுறவு வங்கியின் வளாகத்தின் உள்ளே செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையை ஒட்டி வைக்க பட்டிருந்த காலி மண்ணெண்யை பேரல்களுக்கு உள்ளே சென்று  மறைந்து கொண்டது
இதனை கண்ட பக்கத்தில் உணவகம் நடத்தி வரும் ஜோஸ் ,முத்துராமன் ஸ்டாலின் என்பவர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

சம்பவம் பற்றி அறிந்த பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் வெங்கடாச்சல பூபதி அறிவுறுத்தலின் படி வன ஊழியர் துரை ராஜ், வனக்காவலர் சண்முகம் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்றனர். பின்னர் பதுங்கியிருந்த மலைப்பாம்பு லாவகமாக பிடிக்கபட்டது. பிடிபட்ட பாம்பு 14 அடி நீளம், 40 கிலோ எடையும் இருந்தது. பின்னர் பின்னர் அந்த மலைப்பாம்பு பொய்கை அணை மலைப் பகுதியில் பாதுகாப்பாக கொண்டு சென்று விடப்பட்டது.

மீடியா 7 செய்திகளுக்காக தோவாளை தாலுகா செய்தியாளர் சிவம்

 792 total views,  1 views today