'ஆன்லைன்' மது 'புக்கிங்' கைவிட்டது கேரள அரசு

'ஆன்லைன்' மது 'புக்கிங்' கைவிட்டது கேரள அரசு

August 22, 2016 0 By admin

திருவனந்தபுரம்: ஆன்லைனில் மது வகைகளை முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்த, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த திட்டத்தை, கேரள அரசு கைவிட்டது.

கேரளாவில், மார்க் சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது; அங்கு, முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, 700க்கும் மேற்பட்ட, ‘பார்’கள் மூடப்பட்டன.

நட்சத்திர ஓட்டல்கள் மற்றும், ‘கன்ஸ்யூமர்பெட்’ எனப்படும், கேரள அரசு, கூட்டுறவு நிறுவனம் நடத்தும் கடைகளில் மட்டுமே, தற்போது, மது விற்கப்படுகிறது.

இந்நிலையில், கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை, அடுத்த மாதம், 13ல், கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை, 10 நாட்கள் நடப்பதாலும், அதிக விடுமுறை வருவதாலும், மது வகைகளின் தேவை அதிகமாக இருக்கும். குறைவான கடைகளே இருப்பதால், ‘குடி’மகன்கள் மது வாங்குவதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும்.

இதனால், மது வகைகளை, ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்ய, கேரள அரசு திட்டமிட்டது; இதற்கு கேரள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதை

அடுத்து, மது வகைகளை, ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டத்தை, கேரள அரசு கைவிட்டுஉள்ளது.

ஆன்லைனில் மது வகைகளை முன்பதிவு செய்யும் வசதி குறித்து, மாநில அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை.

ஏ.சி.மொய்தீன் கேரள கூட்டுறவு அமைச்சர், மார்க்சிஸ்ட்

155 total views, 2 views today