ஆந்திராவில் கைதான 32 தமிழர்களின் ஜாமின் மனு தள்ளுபடி

ஐதராபாத் : ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.ஆந்திராவின் திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு செம்மரம் வெட்டுவதற்கு தமிழர்கள் வருவதாக அம்மாநில செம்மரம் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்புப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ஆந்திரப் போலீசார் தீவிரச் சோதனை மேற்கொண்டனர். அப்போது சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டுவதற்கு வந்ததாக 32 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரிடமும் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. கைதான 32 பேரும் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைதானவர்களிடம் தலா 10 பேர் வீதம் பிரித்து திருப்பதி, புத்தூர், ரேணிகுண்டா என 3 இடங்களில் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழர்கள் 32 பேர் மீதும் 6 பிரிவுகளில் ஆந்திர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு தமிழக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபுவுக்கு முதல்வர் ஜெ., கடிதம் எழுதியிருந்தார்.

அவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனு கடந்த 10ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் ஜாமின் கேட்டு திருப்பதி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. விசாரணை முடிவடையாத நிலையில், அவர்களின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

156 total views, 4 views today

Top

Registration

Forgotten Password?

Close