ஆச்சார்யாவில் மாபெரும் “கண்தான நிகழ்ச்சி”

0
0

புதுச்சேரி ஆச்சார்யா கல்வி குழுமத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் இணைந்து இனி ஒரு விதி செய்வோம் என்ற வகையில் தங்களது கண்களை தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

ஆச்சார்யா கண்தானம் உறுதிமொழி படிவங்களை திரு.ஜெ.அரவிந்தன் ஜிப்மர் மருத்துவமனைக்கும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் வழங்கினார்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி திடலில் நடைபெற்ற மாபெரும் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் புதுச்சேரியின் ஜிப்மர் இயக்குநர் திரு. சுபாஷ் சந்திர பரிஜா தலைமை தாங்க, அரவிந்து கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜோஸ்ஃபின் கிருஸ்டி, பொது கண் மருத்துவர் திரு. ராஜ்குமார் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் திரு. கே. ஜெயலதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ஆச்சார்யா கல்வி குழும மேலாண் இயக்குநர் திரு.ஜெ. அரவிந்தன் அவர்கள் கண்தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மனிதப் பிறவியின் மகத்துவத்தை எடுத்துரைத்தார்.  இதனைத் தொடர்ந்து இயற்கையான முறையில் நமது கண்களைப் பேணி பாதுகாக்கும் வகையில் “திவ்யதர்ஷன்” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கண்தானம் செய்த அனைவரையும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள்…

2,904 total views, 6 views today