ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு நடிகர் விஜய் சேதுபதி பாராட்டி 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்

கத்தார் நாட்டின் தோகா நகரில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், திருச்சி முடிகண்டம் பகுதியை சேர்ந்த கோமதி கலந்துக் கொண்டார். இதில், மகளிர் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமையை தேடித் தந்தார்.

ஆசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீராங்கனை கோமதிக்கு பாராட்டும் விதமாக ஐந்து லட்ச ரூபாய் ஊக்கத் தொகையினை திருச்சியில்
உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று விஜய் சேதுபதி ரசிகர் மன்ற மாநில பொறுப்பாளர்கள் நடிகர் விஜய் சேதுபதி சார்பாக காசோலையினை வழங்கினார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி கோமதி அவர்களிடம் தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினார்.

129 total views, 3 views today